வீட்டில் திருட்டு இருவர் சிக்கினர்
வீட்டில் திருட்டு இருவர் சிக்கினர்
வீட்டில் திருட்டு இருவர் சிக்கினர்
ADDED : ஜூன் 17, 2024 01:40 AM
பட்டினப்பாக்கம்:பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் பகுதியில் வசிப்பவர் நேதாஜி,43. இவர் நேற்று முன்தினம் இரவு, காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து துாங்கினார்.
அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவர், 2 சவரன் நகை, 95,000 ரூபாய் மற்றும் பட்டு புடவைகளை திருடிச் சென்றனர். மேலும், பக்கத்து வீடுகளிலும் நுழைந்துள்ளனர்.
அவ்வீடுகளில் எதுவும் கிடைக்காததால், மர்ம நபர்கள் தப்பியுள்ளனர். புகாரின்படி, பட்டினப்பாக்கம் போலீசார் விசாரித்தனர்.
நேற்று அதிகாலை, பட்டினப்பாக்கம் பகுதியில் சுற்றித் திரிந்த இருவரை பிடித்து விசாரித்த போது, நேதாஜி வீட்டில் திருடியவர்கள் எனத் தெரிந்தது.
அவர்களை கைது செய்து விசாரித்ததில், அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன்,26, அஜய்,28, என தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.