/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்கள் கைது தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்கள் கைது
தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்கள் கைது
தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்கள் கைது
தொடர் திருட்டில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்கள் கைது
ADDED : ஜூலை 03, 2024 12:31 AM
ஆதம்பாக்கம், சென்னை, ஆதம்பாக்கம், ஆபிசர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 70. இவர், கடந்த 30ம் தேதி குடும்பத்துடன் வெளியே சென்று வீடு திரும்பியபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 5 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்த புகாரின்படி ஆதம்பாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
ஆதம்பாக்கம் மற்றும் வேளச்சேரியைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் இருவர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களிடம் இருந்து, 5 சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தனர்.
மேலும், பல இடங்களில் சிறு சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவு படி கெல்லீசில் உள்ள சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.