'யு டியூபரை' மிரட்டிய இருவர் கைது
'யு டியூபரை' மிரட்டிய இருவர் கைது
'யு டியூபரை' மிரட்டிய இருவர் கைது
ADDED : ஜூலை 09, 2024 12:06 AM
சிந்தாதிரிப்பேட்டை, யு டியூப் சமூகவலைதளத்தில் வீடியோ பதிவிடுபவர் நந்தா. 40. இவர், சில தினங்களுக்கு முன் சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவில் மொபைல் போன் பழுது பார்ப்பதற்காக சென்றார்.
அப்போது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இருவர் மது அருந்திக் கொண்டு இருந்தனர்.
அதை மொபைல்போனில் நந்தா பதிவு செய்துள்ளார். போதையில் இருந்த இருவரும், நந்தாவின் மொபைல்போனை தட்டிவிட்டு, பகிரங்கமாக மிரட்டியுள்ளனர். அதையும் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் நந்தா வெளியிட்டார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார், குடிபோதையில் ரகளை செய்த பெரம்பூரைச் சேர்ந்த ஸ்ரீதர், 33, ஓட்டேரியைச் சேர்ந்த பார்த்திபன், 24 ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர்.