/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பெட்ரோல் பங்க்கில் கத்தியை காட்டி மிரட்டிய சிறுவர்கள் கைது பெட்ரோல் பங்க்கில் கத்தியை காட்டி மிரட்டிய சிறுவர்கள் கைது
பெட்ரோல் பங்க்கில் கத்தியை காட்டி மிரட்டிய சிறுவர்கள் கைது
பெட்ரோல் பங்க்கில் கத்தியை காட்டி மிரட்டிய சிறுவர்கள் கைது
பெட்ரோல் பங்க்கில் கத்தியை காட்டி மிரட்டிய சிறுவர்கள் கைது
ADDED : ஜூலை 09, 2024 12:07 AM
படப்பை, தாம்பரம் அருகே படப்பையில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் உள்ளது.
இங்கு, படப்பை ஆதனஞ்சேரி பகுதியை சேர்ந்த 15 -- 17 வயதுடைய மூன்று சிறுவர்கள், கே.டி.எம்., டியூக் பைக்கில் நேற்று சென்று 300 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுள்ளனர்.
இதற்கான பணத்தை தராமல், பங்க் ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து பைக்கில் வேகமாக தப்பி சென்றனர்.
இதுகுறித்து பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர், மணிமங்கலம் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் விசாரித்து, 15, 17 வயதுடைய இரண்டு சிறுவர்களை கைது செய்து செங்கல்பட்டு சிறார் பள்ளியில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு சிறுவனை தேடி வருகின்றனர்.
இவர்களிடம் இருந்தது, சென்னையில் திருடப்பட்ட பைக் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.