ADDED : ஜூலை 19, 2024 12:33 AM
காசிமேடு, காசிமேடு, ஜீவரத்தினம் நகர், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிப்பவர் ஜான் பாஷா, 35. திருவொற்றியூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த, 16ம் தேதி இரவு, காசிமேடு, ஜி.என்., செட்டி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, இருவர் ஜான் பாஷாவை வழி மறித்து மிரட்டி, பணம் பறித்து தப்பினர். இது குறித்து, காசிமேடு மீன்பிடித் துறைமுக போலீசாரிடம் ஜான்பாஷா புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், பணம் பறித்த புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஜீவா, 26, சூரைராஜ் ஆகிய இருவரையும், நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.