/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆவடி --- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம் ஆவடி --- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம்
ஆவடி --- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம்
ஆவடி --- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம்
ஆவடி --- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றம்
ADDED : ஜூலை 19, 2024 12:33 AM

ஆவடிஆவடி --- பூந்தமல்லி நெடுஞ்சாலையில், 49 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இதில், பாதசாரிகள் நடப்பதற்காக 'டைல்ஸ்' கற்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆவடி ஜெ.பி., எஸ்டேட் முதல் பருத்திப்பட்டு வரை, 4.5 கி.மீ., துாரத்திற்கு, 100க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள், நடைபாதையை ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர்.
இதனால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டது. வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதுகுறித்து ஆவடி மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு, பல புகார்கள் சென்றன.
இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஆவடி போலீசார் உதவியுடன், சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த, 75க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள் மற்றும் கூரைகளை,'பொக்லைன்' இயந்திரம் உதவியுடன் நேற்று அகற்றினர்.