/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குப்பை கிடங்காக மாறும் கொசஸ்தலை ஆறு திருவள்ளூர் கலெக்டர் பதிலளிக்க உத்தரவு குப்பை கிடங்காக மாறும் கொசஸ்தலை ஆறு திருவள்ளூர் கலெக்டர் பதிலளிக்க உத்தரவு
குப்பை கிடங்காக மாறும் கொசஸ்தலை ஆறு திருவள்ளூர் கலெக்டர் பதிலளிக்க உத்தரவு
குப்பை கிடங்காக மாறும் கொசஸ்தலை ஆறு திருவள்ளூர் கலெக்டர் பதிலளிக்க உத்தரவு
குப்பை கிடங்காக மாறும் கொசஸ்தலை ஆறு திருவள்ளூர் கலெக்டர் பதிலளிக்க உத்தரவு
ADDED : ஜூலை 10, 2024 12:10 AM
சென்னை, கொசஸ்தலை ஆற்றிலும், புழல் ஏரி பகுதியிலும் குப்பை கொட்டப்படுவதை தடுக்க, நாரவாரிக்குப்பம் பேரூராட்சி சார்பில், குப்பை கொட்டும் இடம் தேர்வு செய்யப்பட்டதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு திருவள்ளூர் கலெக்டருக்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை ஒட்டிய, திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியில், கொசஸ்தலை ஆற்றில் சுற்றியுள்ள குடியிருப்புகளில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்படுகின்றன.
அதுமட்டுமல்லாது, புழல் ஏரியின் நீர்த்தேக்கப் பகுதியில் லாரிகள் வாயிலாக இரவு நேரங்களில் குப்பை கொட்டப்படுகின்றன. இதனால் 250 மீட்டர் தொலைவுக்கு துர்நாற்றம் வீசியது.
குப்பை கொட்டப்படுவது தொடர்ந்தால் புழல் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்படும்போது, கழிவுகள் அடித்துச் செல்லப்பட்டு தெருக்கள், வீடுகளுக்கு வரும் வாய்ப்புள்ளதாக குடியிருப்போர் நலச்சங்கத்தினர் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
கொசஸ்தலை ஆற்றிலும், புழல் ஏரியின் நீர்த்தேக்க பகுதியிலும் குப்பை கொட்டப்படுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திருவள்ளூர் கலெக்டர், பொதுப்பணித்துறை, நாரவாரிக்குப்பம் பேரூராட்சி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
நாரவாரிக்குப்பம் பேரூராட்சி சார்பில் குப்பை கொட்டும் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து திருவள்ளூர் கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஆகஸ்ட் 9ல் நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.