/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு அவகாசம் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு அவகாசம்
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு அவகாசம்
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு அவகாசம்
கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு அவகாசம்
ADDED : ஜூலை 30, 2024 12:29 AM
சென்னை, ஜூலை 30-
முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க, நாளை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை கூட்டுறவு மோண்மை நிலையத்தில், 2024- 25ம் ஆண்டிற்கான, முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு, மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.
பயிற்சிக்கு, குறைந்தபட்சம் பிளஸ் - 2 தேர்ச்சியும், 17 வயது பூர்த்தி செய்திருக்கவும் வேண்டும். தமிழில் மட்டுமே பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி வகுப்புகள், பிராட்வே, தேனாம்பேட்டை மற்றும் செங்குன்றம் ஆகிய மூன்று நிலையங்களில் நடக்கும்.
விருப்பம் உள்ளவர்கள், www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க, நாளை மாலை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.