/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சிறுமி பலாத்கார வழக்கு மேலும் மூவர் கைது சிறுமி பலாத்கார வழக்கு மேலும் மூவர் கைது
சிறுமி பலாத்கார வழக்கு மேலும் மூவர் கைது
சிறுமி பலாத்கார வழக்கு மேலும் மூவர் கைது
சிறுமி பலாத்கார வழக்கு மேலும் மூவர் கைது
ADDED : ஜூன் 13, 2024 12:21 AM
விருகம்பாக்கம், பெரவல்லூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, சாலிகிராமத்தில் தங்கி தனியார் பள்ளியில் 11 ம் வகுப்பு படிக்கிறார்.
அண்ணா நகரில் உள்ள கபேவிற்கு நண்பர்களுடன் அடிக்கடி சென்று வந்த சிறுமிக்கு, சினிமா துறையில் பணி செய்யும் இளம் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் அந்த பெண்ணின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சிறுமியை அழைத்துள்ளார். இதையடுத்து, சிறுமி சாலிகிராமத்தில் உள்ள ஒரு குடியிருப்புக்கு சென்றார்.
அங்கு இளம்பெண்னுடன் இரண்டு ஆண் நண்பர்கள் வந்த நிலையில், சிறுமியை வற்புறுத்தி இனிப்பு கொடுத்தனர். அதை சாப்பிட்டவுடன் சிறுமி மயங்கினார்.
அந்த நேரத்தில் சிறுமியை இருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
சில நாட்களில் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அதில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமியின் தாய் விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த சம்பவத்தில், அகிரா, 20, என்ற பெண் மற்றும் வடபழனியை சேர்ந்த சோமேஷ், 21 என, இருவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த வில்லியம்ஸ், 21, என்பவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் திண்டிவனம் பகுதியில் பதுங்கி இருந்த வில்லியம்ஸ் மற்றும் அவரது நண்பர் சூரிய பிரகாஷ், அஜய் ஆகிய மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 3 கிராம் போதை பொருளை பறிமுதல் செய்தனர்.
தொடர் விசாரணையில் போதை பொருளை வாங்கி, சமூக வலைதளம் வாயிலாக கல்லுாரி மாணவர்கள் மற்றும் விழாக்களின் போது விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
சிறுமிக்கு இனிப்பில் போதை பொருளை கலந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது எனவும், போதை பொருள் விற்பனையில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.