ADDED : ஜூன் 16, 2024 12:32 AM
வடக்கு கடற்கரை,பெரியமேடு, ராமபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் முகமது ஹரீப், 57. இவர், கடந்த 5ம் தேதி இரவு, பைக்கில் முத்துசாமி மேம்பாலம் வழியாக சென்றபோது, மர்ம நபர் கும்பல் கத்திமுனையில் அவரிடம் இருந்து 13.40 லட்சம் ரூபாய் பறித்து சென்றது.
இந்த வழக்கில் மூன்று பேரை வடக்கு கடற்கரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த பெரும்பாக்கத்தைச் சேர்ந்த பப்லு, 24, கோபி, 20, சுரேஷ், 33, ஆகியோர், நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.