/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சென்னையில் மழைநீர் வடிகால் பணி இணையதளத்தில் பதிவேற்ற முடிவு சென்னையில் மழைநீர் வடிகால் பணி இணையதளத்தில் பதிவேற்ற முடிவு
சென்னையில் மழைநீர் வடிகால் பணி இணையதளத்தில் பதிவேற்ற முடிவு
சென்னையில் மழைநீர் வடிகால் பணி இணையதளத்தில் பதிவேற்ற முடிவு
சென்னையில் மழைநீர் வடிகால் பணி இணையதளத்தில் பதிவேற்ற முடிவு
ADDED : ஜூன் 16, 2024 12:32 AM
சென்னை, ''சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துள்ள பகுதிகள், மண்டல வாரியாக இணையதளத்தில் பதிவேற்றப்படும்,'' என, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை, கிண்டி எம்.எஸ்.எம்.இ., நிறுவன அரங்கில், உற்பத்தியாளர்கள் - விற்பனையாளர்கள் இணைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
பெண் தொழில் முனைவோர்களின், உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதில் உள்ள சிரமங்களை எளிதாக்குவதற்காக, இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:
வேளச்சேரி சதுப்புநிலப்பகுதி அருகே, குடியிருப்பு பகுதி போன்ற இடங்களில், என்ன திட்டமிட்டாலும் தண்ணீர் தேங்கும் பகுதிகளாக உள்ளன. அவை அடையாளம் காணப்பட்டு, மாற்று ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் மழைநீர் வடிகால் பணி எந்த பகுதியில் முடிவடைந்தது. எந்த இடத்தில் எவ்வளவு சதவீதம் முடிந்துள்ளது போன்ற விபரங்கள், மண்டல வாரியாக இணையதளத்தில் வெளியிடப்படும். மழைநீர் வடிகால் பணியை பொறுத்தவரை தென்சென்னையில் 71 சதவீதம்; வடசென்னையில் 81 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
வடிகால்களில், சேறு தேங்குவது பெரும் சவாலாக உள்ளது. அவற்றை துார்வாரும் பணிகள் மேற்கொண்டு வருகிறோம். அனுமதி இல்லாமல், புதிதாக வீடு கட்டுவது சட்டத்திற்கு புறம்பானது. அவற்றை இடிப்பதற்கு நீதிமன்ற வழிகாட்டுதல் உள்ளது.
வழங்கப்பட்ட அனுமதிக்கு மாறாக கட்டடம் கட்டிருந்தாலும் இடிக்கப்படும். வேறு வகையில் யாரேனும் சட்ட விரோத விதிமீறலுக்கு உதவுவர் என்ற எண்ணத்தை, பொதுமக்கள் கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.