/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மூதாட்டியின் ஏ.டி.எம்., கார்டில் பணம் திருட்டு மூதாட்டியின் ஏ.டி.எம்., கார்டில் பணம் திருட்டு
மூதாட்டியின் ஏ.டி.எம்., கார்டில் பணம் திருட்டு
மூதாட்டியின் ஏ.டி.எம்., கார்டில் பணம் திருட்டு
மூதாட்டியின் ஏ.டி.எம்., கார்டில் பணம் திருட்டு
ADDED : ஜூலை 10, 2024 12:16 AM
சென்னை, மூதாட்டியின், தொலைந்த ஏ.டி.எம்., கார்டில் இருந்து பணம் எடுத்த மர்மநபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
ஐஸ்ஹவுஸ், வைக்கோல் தொட்டி தெருவைச் சேர்ந்தவர் சகுந்தலா, 67. நேற்று முன்தினம் இரவு உடல் நிலை சரியில்லாததால் திருவல்லிக்கேணியில் உள்ள மருந்தகத்தில் மருந்து வாங்குவதற்காக சென்றார். வீட்டிற்கு திரும்பியபோது, 6,500 ரூபாய், ஏ.டி.எம்.,கார்டு அடங்கிய பர்ஸ் திருடுபோனது தெரியவந்தது. மேலும், மர்மநபர் திருடிய கார்டை பயன்படுத்தி, 3,000 ரூபாய் எடுத்ததும் தெரியவந்தது. சம்பவம் குறித்து மூதாட்டி ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.