/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி
வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி
வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி
வேலை வாங்கி தருவதாக ரூ.10 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 10, 2024 12:15 AM
சென்னை, கீழ்ப்பாக்கம், மேடவாக்கம் டேங்க் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ், 68; ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்.
இவரது மகள் பலமுறை, ரயில்வே பணிக்கான தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், பூந்தமல்லி, காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த தயாளினி தேவி, மைக்கேல் மற்றும் புரசைவாக்கத்தைச் சேர்ந்த சாமிநாதன் ஆகியோர், அமைச்சர் கோட்டாவில் ரயில்வே வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.
இதை நம்பிய ஜார்ஜ், 2022ம் ஆண்டு ஏப்., 7ம் தேதி முதல் செப்., 29ம் தேதி வரையிலுமாக, 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், வேலை வாங்கி தராமலும், கொடுத்த பணத்தை திரும்ப தராமலும் அவர்கள் ஏமாற்றியுள்ளனர்.
இதையடுத்து, பணமோசடி குறித்து, ஜார்ஜ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தலைமை செயலக காலனி போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.