/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆபாசப்படம் வெளியிடுவதாக மாணவிக்கு மிரட்டல் ஆபாசப்படம் வெளியிடுவதாக மாணவிக்கு மிரட்டல்
ஆபாசப்படம் வெளியிடுவதாக மாணவிக்கு மிரட்டல்
ஆபாசப்படம் வெளியிடுவதாக மாணவிக்கு மிரட்டல்
ஆபாசப்படம் வெளியிடுவதாக மாணவிக்கு மிரட்டல்
ADDED : ஜூலை 27, 2024 12:22 AM
சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி, கோயம்பேடில் உள்ள தனியார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லுாரியில் இருந்து வீடு திரும்பிய மாணவி, படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மாணவிக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் வாயிலாக பழக்கமானவர், பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடப்போவதாக மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போய் மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.