/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சிறுமியுடன் திருமணம் வாலிபருக்கு 'போக்சோ' சிறுமியுடன் திருமணம் வாலிபருக்கு 'போக்சோ'
சிறுமியுடன் திருமணம் வாலிபருக்கு 'போக்சோ'
சிறுமியுடன் திருமணம் வாலிபருக்கு 'போக்சோ'
சிறுமியுடன் திருமணம் வாலிபருக்கு 'போக்சோ'
ADDED : ஜூலை 27, 2024 12:23 AM
அயனாவரம், ஜூலை 27--
சிறுமியை கடத்தி, திருப்பதியில் திருமணம் செய்த வில்லிவாக்கம் வாலிபர், 'போக்சோ'வில் கைது செய்யப்பட்டார்.
அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண், அயனாவரம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், என் 14 வயது மகள், எட்டாம் வகுப்பு படிக்கிறார். கடந்த 19ம் தேதி, வியாசர்பாடியில் உள்ள என் மூத்த மகளின் வீட்டில் இருந்த அவளை காணவில்லை.
அவளை காதலித்து வந்த பெயின்டர் மணிகண்டன் என்பவரும் காணவில்லை.
மொபைல்போனில் அழைத்து விசாரித்த போது, இருவரும் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டதாகக் கூறி, இணைப்பை துண்டித்தனர்.
மகளை மீட்டு, வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
வழக்கு பதிந்து, அயனாவரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து வரும் நிலையில், நேற்று முன்தினம் இரவு, சிறுமி தன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
இதற்கிடையில், கோவிலில் திருமணம் செய்தது போல், சமூக வலைதளத்தில் புகைப்படம் பதிவிடப்பட்டதாக தெரிகிறது.
சிறுமியிடம் விசாரித்த போது, திருப்பதியில் திருமணம் செய்தது உறுதியானது.
இதையடுத்து, சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன், 25, என்பவரை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.