/உள்ளூர் செய்திகள்/சென்னை/ போலீசுக்கு 'தண்ணி' காட்டிய ரவுடி கைது போலீசுக்கு 'தண்ணி' காட்டிய ரவுடி கைது
போலீசுக்கு 'தண்ணி' காட்டிய ரவுடி கைது
போலீசுக்கு 'தண்ணி' காட்டிய ரவுடி கைது
போலீசுக்கு 'தண்ணி' காட்டிய ரவுடி கைது
ADDED : ஜூலை 24, 2024 01:18 AM
வில்லிவாக்கம், 'பிடிவாரன்ட்' பிறப்பித்தும், ஒன்றரை ஆண்டுகளாக போலீசுக்கு, 'தண்ணி காட்டி' வந்த தலைமறைவு ரவுடியை, போலீசார் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
வில்லிவாக்கம், நியூ ஆவடி சாலையைச் சேர்ந்த செல்வம், 37, என்பவரை, கடந்த 2022 மார்ச் 9ம் தேதி, மர்ம நபர்கள் கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர்.
இந்த வழக்கில் வில்லிவாக்கம், பாரதி நகரைச் சேர்ந்த ரவுடி அய்யப்பன், 32, உட்பட ஆறு பேரை, வில்லிவாக்கம் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
நீதிமன்ற ஜாமினில் வெளிவந்த அய்யப்பன், வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.
அய்யப்பனை கைது செய்ய, எழும்பூர் நீதிமன்றம் கடந்தாண்டு ஜன., 9ம் தேதி,'பிடிவாரன்ட்' பிறப்பித்தது.
இதையடுத்து, பிடிவாரன்ட் பிறப்பித்தும், ஒன்றரை ஆண்டுகளாக போலீசுக்கு,'தண்ணி காட்டிய' அய்யப்பனை, வில்லிவாக்கம் போலீசார் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.