/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பார்வை மாற்றுத்திறன் வீரர்களுக்கான கைப்பந்தில் எம்.சி.சி., 'சாம்பியன்' பார்வை மாற்றுத்திறன் வீரர்களுக்கான கைப்பந்தில் எம்.சி.சி., 'சாம்பியன்'
பார்வை மாற்றுத்திறன் வீரர்களுக்கான கைப்பந்தில் எம்.சி.சி., 'சாம்பியன்'
பார்வை மாற்றுத்திறன் வீரர்களுக்கான கைப்பந்தில் எம்.சி.சி., 'சாம்பியன்'
பார்வை மாற்றுத்திறன் வீரர்களுக்கான கைப்பந்தில் எம்.சி.சி., 'சாம்பியன்'
ADDED : ஜூலை 24, 2024 01:18 AM

சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லுாரி சார்பில், அதன் நிறுவனர் ஹாரி குரோ பக்கை நினைவுகூரும் வகையில், 'பக்' கோப்பைக்கான விளையாட்டு திருவிழா துவங்கி நடக்கிறது.
இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் பங்கேற்று உள்ளனர். நேற்று நடந்த பார்வை மாற்றுத்திறன் வீரர்களுக்கான வாலிபால் போட்டியில் நான்கு அணிகள் மோதின.
முதல் போட்டியில், எம்.சி.சி., அணி, 30 - 18 என்ற புள்ளிக் கணக்கில், பிரசிடென்சி அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில், ஜி.ஏ.சி., அணி, 30 - 16 என்ற கணக்கில் பிரசிடென்சி 'பி' அணியையும், பிரசிடென்சி 'ஏ' அணி, 30 - 23 என்ற கணக்கில். ஜி.ஏ.சி., அணியையும் தோற்கடித்தன.
கடைசி லீக் ஆட்டத்தில் எம்.சி.சி., அணி, 30 - 20 என்ற புள்ளிக்கணக்கில், பிரசிடென்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
அனைத்து போட்டிகள் முடிவில் எம்.சி.சி., அணி முதலிடத்தையும், பிரசிடென்சி 'பி' அணி இரண்டாவது இடத்தையும் வென்றன.