ADDED : ஜூலை 24, 2024 12:21 AM
படப்பை, படப்பையில் உள்ள காயலான் கடையில் நேற்று முன்தினம், இளைஞர்கள் மூவர் கத்தியை காட்டி மிரட்டி, உரிமையாளர் செந்தில் குமாரிடம், 800 ரூபாய் பறித்து சென்றனர். மணிமங்கலம் போலீசார் விசாரித்தனர்.
இதில், ராணிபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வெற்றிசெல்வன், 19, என்பவர் சிக்கினார். நேற்று அவரை கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.