ADDED : ஜூலை 31, 2024 12:12 AM
வியாசர்பாடி,
வியாசர்பாடி, 3வது பள்ளத் தெருவைச் சேர்ந்தவர் சேர்மராஜா, 42. இவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு வந்த மர்ம நபர்கள் இருவர், சேர்மராஜிடம் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். வியாசர்பாடி போலீசாரின் விசாரணையில், வியாசர்பாடியைச் சேர்ந்த ஆகாஷ், 23, சரத்குமார், 25, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இதே போல், வியாசர்பாடி, பி.வி.காலனி 1வது தெருவைச் சேர்ந்தவர் 'சூழ்ச்சி' சுரேஷ், 35; ரவுடியாக வலம் வந்த இவர் மீது, எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில், அப்பகுதி வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டி வந்துள்ளார். தகவலறிந்த எம்.கே.பி.நகர் போலீசார், நேற்று சுரேஷை கைது செய்தனர்.