ADDED : ஜூலை 31, 2024 12:12 AM
மறைமலை நகர், மறைமலை நகர் நகராட்சி, கிழக்கு பொத்தேரி பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ் என்பவரின் 10 வயது மகன். இவர், நேற்று காலை காத்தவராயன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த பகுதியில் சுற்றிச்திரிந்த தெரு நாய்கள், சிறுவனை கால் உள்ளிட்ட பல இடங்களில் கடித்து குதறின. அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்தனர்.
தொடர்ந்து, பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.