/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரவுடியை கிண்டல் செய்தவர் புகார் செய்த போது கைது ரவுடியை கிண்டல் செய்தவர் புகார் செய்த போது கைது
ரவுடியை கிண்டல் செய்தவர் புகார் செய்த போது கைது
ரவுடியை கிண்டல் செய்தவர் புகார் செய்த போது கைது
ரவுடியை கிண்டல் செய்தவர் புகார் செய்த போது கைது
ADDED : ஜூன் 02, 2024 12:22 AM

அண்ணா நகர், அண்ணா நகர், நடுவாங்கரையைச் சேர்ந்தவர் ரவுடி பெரிய ராபர்ட், 34. அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கமலேஷ் 28 என்பவர், கடந்த 30ம் தேதி, அன்னை சத்யா நகர் பகுதியில் பாட்டுப் பாடியபடி நடந்து சென்றார்.
தன்னை கிண்டல் செய்வதாகக்கூறி, கமலேஷிடம் ராபர்ட் தகராறு செய்துள்ளார். வாக்குவாதம் முற்றியதால் இரும்பு கம்பியால் கமலேசை தாக்கினார்.
அங்கிருந்தவர்கள், கமலேஷை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிகிச்சைக்குப்பின், சம்பவம் குறித்து அண்ணா நகர் போலீசாரில் கமலேஷ் புகார் அளிக்க வந்தார். விசாரணையில், 2024 பிப்ரவரியில் கஞ்சா வழக்கில் தலைமறைவான குற்றவாளி கமலேஷ் என்பது தெரிந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின், கமலேஷை தாக்கிய, பழைய குற்றவாளியான பெரிய ராபர்ட், 34 என்பவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.