/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 20 கிலோ கஞ்சா பறிமுதல் திருநங்கை உட்பட மூவர் கைது 20 கிலோ கஞ்சா பறிமுதல் திருநங்கை உட்பட மூவர் கைது
20 கிலோ கஞ்சா பறிமுதல் திருநங்கை உட்பட மூவர் கைது
20 கிலோ கஞ்சா பறிமுதல் திருநங்கை உட்பட மூவர் கைது
20 கிலோ கஞ்சா பறிமுதல் திருநங்கை உட்பட மூவர் கைது
ADDED : ஜூன் 02, 2024 12:22 AM
அண்ணா நகர், ஆந்திராவில் இருந்து, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கஞ்சா கடத்துவதாக, அண்ணா நகர் மதுவிலக்கு போலீசாருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. திருநங்கை உட்பட மூவர், சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் இருந்து ஆட்டோவில் கஞ்சா எடுத்துச் சென்றது தெரிந்தது. போலீசார், அவர்களை பின் தொடர்ந்து சென்றனர்.
மூவரும், பெரம்பூர் எருக்கஞ்சேரி அருகில், மற்றொரு ஆட்டோவில் பார்சல்களை மாற்றினர். அப்போது, கையும் களவுமாக, போலீசார் அவர்களை பிடித்தனர். பார்சல்களில் இருந்த 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.எருக்கஞ்சேரியைச் சேர்ந்த திருநங்கை அகல்யா, 23, மகாலட்சுமி, 20, புவனேஸ்வரி, 20, ஆகிய மூவரையும், போலீசார் கைது செய்தனர்.
l அமைந்தகரை என்.எஸ்.கே., சாலையில், நின்றிருந்த இருவரை, போலீசார் சோதித்தனர். அவர்களிடம், 1.50 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில், மதுராந்தகத்தைச் சேர்ந்த லோகேஸ்வரன், 23, மதன், 18, என்பதும், இருவரும் ஒடிசாவிற்கு பைக்கில் சென்று, கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது.
அவர்கள் அளித்த தகவலின்படி, மதுராந்தகத்தில் உள்ள லோகேஸ்வரன் வீட்டில் இருந்து, நேற்று மேலும் 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.