ஓடும் ரயிலில் செயின் பறித்தவர் கைது
ஓடும் ரயிலில் செயின் பறித்தவர் கைது
ஓடும் ரயிலில் செயின் பறித்தவர் கைது
ADDED : ஜூலை 05, 2024 12:42 AM

ஆவடி சென்னை பெரம்பூர் லோகோ பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி, 33. தன் 2 வயது குழந்தையுடன், கடந்த மே 28 ம் தேதி காலை, குன்றத்துாரில் உள்ள தந்தை வீட்டிற்கு செல்ல, மின்சார ரயிலில் பயணித்தார்.
காயத்ரி, மகளிர் பெட்டியில் தனியாக பயணிப்பதை நோட்டமிட்ட மர்ம நபர், ஒருவர் அதே பெட்டியில் ஏறியுள்ளார். அண்ணனுர் --- ஆவடி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்றபோது, பட்டாக்கத்தியை காட்டி, காயத்ரி அணிந்திருந்த நகையை கழற்றித்தருமாறு மர்ம நபர் மிரட்டி உள்ளார். அவருடன் போராடியதில் காயத்ரியின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு, ஓடும் ரயிலில் குதித்து மர்மநபர் தப்பினார்.
இதுகுறித்து விசாரித்த ஆவடி ரயில்வே போலீசார், மாங்காடு பேருந்து நிலையம் அருகே பதுங்கி இருந்த திருநின்றவூரைச் சேர்ந்த மாபாட்ஷா, 38 என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின் தாலி சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணைக்குப் பின் அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.