/உள்ளூர் செய்திகள்/சென்னை/ போட்டோவை காட்டி பெண்ணை மிரட்டியவர் கைது போட்டோவை காட்டி பெண்ணை மிரட்டியவர் கைது
போட்டோவை காட்டி பெண்ணை மிரட்டியவர் கைது
போட்டோவை காட்டி பெண்ணை மிரட்டியவர் கைது
போட்டோவை காட்டி பெண்ணை மிரட்டியவர் கைது
ADDED : ஜூன் 25, 2024 12:40 AM
பெரவள்ளூர், வியாசர்பாடியைச் சேர்ந்தவர் கோகுல்நாத், 33; பெரவள்ளூர், பேப்பர் மில்ஸ் சாலையில், ஆர்.எஸ்.செட்டிநாடு உணவகம் நடத்தி வருகிறார்.
இவருக்கு, நண்பர் ஒருவர் வாயிலாக அறிமுகமான, அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண்ணை, ஹோட்டலில் பங்குதாரராக சேர்த்துள்ளார்.
அதன்படி, அப்பெண்ணிடம் 7.50 லட்சம் ரூபாய் பெற்ற கோகுல்நாத், அவரை விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
தனக்கு திருமணமாகி இரு பிள்ளைகள் இருப்பதாக அப்பெண் கூறியும், கோகுல்நாத் வற்புறுத்தியதால், ஒரு கட்டத்தில் அப்பெண்ணும் அவரிடம் நெருங்கி பழகியுள்ளார்.
இந்நிலையில், கோகுல்நாத்தின் நண்பரான தீபன்குமார் என்பவருக்கு, அவரது அவசர தேவைக்காக 2.50 லட்சம் ரூபாய் கொடுத்த அப்பெண், சில நாட்கள் கழித்து பணத்தை கேட்டுள்ளார்.
அப்போது தீபன்குமார், நீயும் கோகுல்நாத்தும் பழகிய போது எடுத்த படங்கள் என்னிடம் உள்ளன. பணத்தை திருப்பி கேட்டால், போட்டோவை உன் கணவருக்கு அனுப்பி விடுவேன்' என மிரட்டிஉள்ளார்.
இதன் பின்னணியில் கோகுல்நாத்தும் இருப்பது தெரிந்தது. இதுகுறித்து புகாரின்படி, பெரவள்ளூர் போலீசார் வியாசர்பாடியைச் சேர்ந்த கோகுல்நாத்தை கைது செய்தனர்.