Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ முன்மாதிரி ஓட்டுனர்களை அழைத்து கமிஷனர் பாராட்டு

முன்மாதிரி ஓட்டுனர்களை அழைத்து கமிஷனர் பாராட்டு

முன்மாதிரி ஓட்டுனர்களை அழைத்து கமிஷனர் பாராட்டு

முன்மாதிரி ஓட்டுனர்களை அழைத்து கமிஷனர் பாராட்டு

ADDED : ஜூன் 25, 2024 12:39 AM


Google News
Latest Tamil News
சென்னை, பெரம்பூர், பொன்னுசாமி நகரைச் சேர்ந்தவர் சகாயராஜ், 55, அயனாவரத்தைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன், 52. இருவரும் ஆட்டோ ஓட்டுனர்கள்.

கடந்த 20ம் தேதி, பெரம்பூர் நெடுஞ்சாலையில் 'எவர்வின்' பள்ளி அருகே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது முன்னே இருசக்கர வாகனத்தில் சென்றவரின் பேன்ட் பாக்கெட்டிலிருந்து பணம் சாலையில் விழுந்ததை இருவரும் கவனித்தனர்.

உடனே அவற்றை எடுத்து, அருகே உள்ள ஓட்டேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார், 10,000 பணத்தின் உரிமையாளர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட், இரண்டு ஆட்டோ ஓட்டுனர்களையும் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us