ADDED : ஜூன் 25, 2024 12:18 AM
திருவான்மியூர், பெசன்ட் நகர், ஓடைகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அற்புதம், 54. மாநகராட்சி கழிப்பறையை ஒப்பந்தம் எடுத்து கவனித்து வந்தார். இவர், உறவினர் ஒருவரின் மகளை வளர்க்கிறார்.
அற்புதத்தின் சகோதரர் கபாலி மகன் கிஷோர், 25, வளர்ப்பு பெண்ணை காதலித்துள்ளார். இதற்கு கபாலி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இவர்கள் காதலுக்கு உதவியதாக கருதிய கபாலி, நேற்று முன்தினம், அற்புதத்தை கத்தியால் வெட்டினார். அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
ஆனால், போலீசார் விசாரணையில், கிஷோர் தாக்கியதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. தீவிர விசாரணை நடத்திய பின், அற்புதத்தை கபாலி வெட்டியது உறுதியானது. இதையடுத்து, போலீசார் கபாலியை கைது செய்தனர்.