/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இச்சைக்கு மறுத்த அத்தை கொன்றவருக்கு ஆயுள் இச்சைக்கு மறுத்த அத்தை கொன்றவருக்கு ஆயுள்
இச்சைக்கு மறுத்த அத்தை கொன்றவருக்கு ஆயுள்
இச்சைக்கு மறுத்த அத்தை கொன்றவருக்கு ஆயுள்
இச்சைக்கு மறுத்த அத்தை கொன்றவருக்கு ஆயுள்
ADDED : ஜூன் 25, 2024 12:19 AM
செங்கல்பட்டு, குரோம்பேட்டை, பாரதிபுரத்தை சேர்ந்தவர்ஜெயமுருகன். ஐ.டி., நிறுவன ஊழியர். அவரது மனைவி கிருஷ்ணவேணி, 35. இவர்களுக்கு மகள், மகன் உள்ளனர்.
எழும்பூரைச் சேர்ந்தவர் அருண்குமார், 32. ஐ.டி., நிறுவன ஊழியர். இவர் ஜெயமுருகனின் உறவினர். இவருக்கு கிருஷ்ணவேணி அத்தை முறை.
கடந்த 2016, ஜூன் 14ல் வீட்டில் கிருஷ்ணவேணி தனியாக இருந்தபோது, அருண்குமார் வந்துள்ளார். அப்போது பாலியல் இச்சைக்கு இணங்குமாறு அருண்குமார் வற்புறுத்தியுள்ளார். கிருஷ்ணவேணி மறுத்ததால், விஷயம் வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சத்தில் அவரை கத்தியால் சரமாரியாக குத்தி, அருண்குமார் கொலை செய்தார்.
இந்த வழக்கு விசாரணை, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையில், அருண்குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதையடுத்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தமிழரசி தீர்ப்பளித்தார்.