/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அமைந்தகரையில் போக்குவரத்து நெரிசலுக்கு விடிவு சாலையை விரிவாக்கம் செய்கிறது நெடுஞ்சாலைத்துறை அமைந்தகரையில் போக்குவரத்து நெரிசலுக்கு விடிவு சாலையை விரிவாக்கம் செய்கிறது நெடுஞ்சாலைத்துறை
அமைந்தகரையில் போக்குவரத்து நெரிசலுக்கு விடிவு சாலையை விரிவாக்கம் செய்கிறது நெடுஞ்சாலைத்துறை
அமைந்தகரையில் போக்குவரத்து நெரிசலுக்கு விடிவு சாலையை விரிவாக்கம் செய்கிறது நெடுஞ்சாலைத்துறை
அமைந்தகரையில் போக்குவரத்து நெரிசலுக்கு விடிவு சாலையை விரிவாக்கம் செய்கிறது நெடுஞ்சாலைத்துறை
ADDED : ஜூன் 09, 2024 01:25 AM

அமைந்தகரை:அமைந்தகரையில் பல ஆண்டு பிரச்னையான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாணும் வகையில், தனியார் இடத்தை கையகப்படுத்தி, சாலை விரிவாக்கம் பணியை, நெடுஞ்சாலைத்துறை நேற்று துவங்கியது.
சென்னையில் பாரிமுனை, கீழ்ப்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் மிக முக்கிய சாலையாக பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளது.
எப்போதும் பரபரப்பாக இருக்கும் இச்சாலையில், பூந்தமல்லி பகுதியில் துவங்கி அரும்பாக்கம், அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், பிராட்வே வரை, நாள் முழுவதும் லட்சக் கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இவ்வளவு முக்கியமான இந்த சாலையில், பல ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் பிரச்னை நீடித்து வருகிறது. குறிப்பாக, கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லுாரியின் அருகில் உள்ள 'டோல்கேட்' பேருந்து நிறுத்ததில் இருந்து அமைந்தரை சந்தை வரை, குறுகிய சாலையாக இருக்கிறது. இதனால், காலையும் மாலையும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து நமது நாளிதழிலும் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், சாலையை விரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது.
இதற்காக, குறுகிய சாலையை விரிவாக்கும் வகையில், தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை நேற்று முன்தினம் நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தியது. இதையடுத்து, நேற்று முதல் சாலையை விரிவாக்கம் செய்யும் பணி துவங்கியது.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது :
பல ஆண்டுகளாக அமைந்தகரையில் குறுகிய சாலையில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை இருந்தது.
இதற்கு தீர்வுகாணும் வகையில், தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை, ஒரு கோடி ரூபாய்க்கு நெடுஞ்சாலைத்துறை வாங்கியது.
நேற்று முன்தினம் இடம் முறையாக கையகப்படுத்தப்பட்டது. தற்போது, இங்கு, 3.5 மீ., அகலமும், 60 மீ., நீளமும் சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன.
முதல்கட்டமாக கடைகளை அகற்றும் பணிகள் நேற்று துவங்கியது. இதன் அருகில் உள்ள சென்னை மாநகராட்சியின் துவக்க பள்ளியின் தடுப்பு சுவர் வரை சாலை வருகிறது.
விரைவில், விரிவாக்கம் செய்யப்பட்ட இடத்தில் புதிய சாலை அமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.