/உள்ளூர் செய்திகள்/சென்னை/ உள்வாங்கும் 'டம்மி' சாலை பள்ளத்தில் சிக்கும் வாகனங்கள் உள்வாங்கும் 'டம்மி' சாலை பள்ளத்தில் சிக்கும் வாகனங்கள்
உள்வாங்கும் 'டம்மி' சாலை பள்ளத்தில் சிக்கும் வாகனங்கள்
உள்வாங்கும் 'டம்மி' சாலை பள்ளத்தில் சிக்கும் வாகனங்கள்
உள்வாங்கும் 'டம்மி' சாலை பள்ளத்தில் சிக்கும் வாகனங்கள்
ADDED : ஜூன் 09, 2024 01:25 AM

வேளச்சேரி:அடையாறு மண்டலம், 175வது வார்டு, வேளச்சேரி, நேதாஜி சாலை 40 அடி அகலம் கொண்டது. வேளச்சேரி ஏரியில் விழும் கழிவுநீரை, கிணற்றில் சேமித்து அதை கழிவுநீர் வெளியேற்று நிலையம் கொண்டு செல்லும் பணி நடக்கிறது.
இதற்காக, நேதாஜிசாலையில் குழாய் பதிக்கப்பட்டது. பள்ளத்தை சீரமைக்காததால், 3 அடி வரை உள்வாங்கியது. அதில் மண் கொட்டி நிரப்பினர். அவ்வப்போது பெய்யும் மழையில் மீண்டும் உள்வாங்கியது.
நேற்று, அதில் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி சிக்கியது. நான்கு மணி நேரம் போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டது.
அப்பகுதிமக்கள் கூறியதாவது:
போக்குவரத்து அதிகமுள்ள பகுதியானதால், பணி முடிந்ததும் பள்ளத்தை முறையாக சீரமைக்கக் கூறினோம்.
தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தபின் சீரமைக்கப்படும் என்றனர். ஆனால், பைக், ஆட்டோ, கார், லாரி என எதாவது ஒரு வாகனம் தினமும் பள்ளத்தில் சிக்குகிறது. 10ம் தேதி பள்ளி திறக்கிறது.
பள்ளி வாகனங்கள் செல்லும் சாலையாக உள்ளதால், பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.