/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வடிகால் பள்ளத்தில் வீடுகள் விழும் அபாயம் துரித நடவடிக்கை மேற்கொண்ட மாநகராட்சி வடிகால் பள்ளத்தில் வீடுகள் விழும் அபாயம் துரித நடவடிக்கை மேற்கொண்ட மாநகராட்சி
வடிகால் பள்ளத்தில் வீடுகள் விழும் அபாயம் துரித நடவடிக்கை மேற்கொண்ட மாநகராட்சி
வடிகால் பள்ளத்தில் வீடுகள் விழும் அபாயம் துரித நடவடிக்கை மேற்கொண்ட மாநகராட்சி
வடிகால் பள்ளத்தில் வீடுகள் விழும் அபாயம் துரித நடவடிக்கை மேற்கொண்ட மாநகராட்சி
ADDED : ஜூலை 09, 2024 12:31 AM

துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார் மண்டலம், 193, 195, 196 ஆகிய வார்டுகளில், 630 தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் உள்ள கால்வாய் மற்றும் வடிகால்கள், சதுப்பு நிலம் மற்றும் பகிங்ஹாம் கால்வாயை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு உள்ளன.
பல தெருக்களில் வடிகால் இல்லாததால், கடந்த ஆண்டு பருவமழையின் போது இக்குடியிருப்புகளில் வெள்ளம் தேங்கியது; பழைய கால்வாய்களும் சேதமடைந்திருந்தன.
இதனால், 12 கி.மீ., துாரத்தில் வடிகால் கட்ட, 58 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கவிதா கட்டுமான நிறுவனம், கடந்த ஆண்டு பணியை துவங்கியது.
நிர்வாக சிக்கலால், கட்டுமான நிறுவனம் பணியை பாதியில் நிறுத்தியது. இதனால், வடிகாலுக்காக தோண்டிய பள்ளத்தில் மழைநீர் மாதக்கணக்கில் தேங்கி நிற்கிறது. ஈரப்பதம் அதிகரித்து, வீடுகள், சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இது குறித்து, நம் நாளிதழில் நேற்று, படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள், சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இதேபோல், பணி பாதியில் நிறுத்திய இடங்களையும் பார்வையிட்டனர்.
ஒப்பந்த நிறுவனத்தை அழைத்து, பணியை உடனே துவங்க வேண்டும். இல்லையென்றால், கருப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரித்தனர்.
இதையடுத்து, பணியை உடனே துவக்கி விரைந்து முடிக்கப்படும் என, ஒப்பந்த நிறுவனம் உறுதி அளித்ததை அடுத்து, பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.