கழிவுநீர் மூடியால் விபத்து அபாயம்
கழிவுநீர் மூடியால் விபத்து அபாயம்
கழிவுநீர் மூடியால் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 09, 2024 12:31 AM

கழிவுநீர் மூடியால் விபத்து அபாயம்
பெசன்ட் நகர் முதல் அவென்யூ சாலை மைய பகுதியில், கழிவுநீர் கால்வாய் செல்கிறது. குழாயில் துார்வாரும் வகையில், இயந்திர நுழைவு வாயில் அமைத்து, மூடி போடப்பட்டு உள்ளது. தரமில்லாமல் கட்டமைத்ததால், மூடி உள்வாங்கி உள்ளது.
இதனால், இரவில் கவனக்குறைவாக செல்லும் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. தற்காலிக நடவடிக்கையாக, உள்வாங்கிய பள்ளத்தில் குச்சி நட்டு, அப்பகுதியினர் எச்சரிக்கை செய்துள்ளனர். ஒரு மாதமாகியும் இதே நிலை நீடிக்கிறது. விபத்தை தடுக்க, மூடியை சீரமைக்க வேண்டும்.
- சிவலிங்கம்,
அடையாறு