/உள்ளூர் செய்திகள்/சென்னை/ டி.ஆர்.பாலு வீட்டை சுற்றி வந்த 'கேமரா' காரால் சலசலப்பு டி.ஆர்.பாலு வீட்டை சுற்றி வந்த 'கேமரா' காரால் சலசலப்பு
டி.ஆர்.பாலு வீட்டை சுற்றி வந்த 'கேமரா' காரால் சலசலப்பு
டி.ஆர்.பாலு வீட்டை சுற்றி வந்த 'கேமரா' காரால் சலசலப்பு
டி.ஆர்.பாலு வீட்டை சுற்றி வந்த 'கேமரா' காரால் சலசலப்பு
ADDED : ஜூன் 04, 2024 12:28 AM

தேனாம்பேட்டை தி.மு.க., - எம்.பி., - டி.ஆர்.பாலு, 82, தி.நகர் ராமன் சாலையில் வசிக்கிறார். இவரது வீட்டின் அருகே நேற்று கேமரா பொருத்தப்பட்ட கார்கள் சுற்றிவந்துள்ளன.
வீட்டின் காவலர்கள்,இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே தேனாம்பேட்டை போலீசார் அங்கு வந்து கேமாரவுடன் சுற்றிய கார்களை பிடித்து சோதித்தனர்.
காரில் 'டெக் மகிந்திரா' வாகன தயாரிப்பு நிறுவன ஊழியர்கள் இருந்தனர்.
பிரபலமான 'ஆப்பிள்' மற்றும் டெக் மகிந்திரா நிறுவனங்கள் இணைந்து, சாலைகளை படம் பிடித்து அதை, செயலியின் வரைபடத்தில் பதிவேற்றுவதற்கான பணிகளை மேற்கொண்டிருந்தன.
இதற்கு, 'ஸ்ட்ரீட் வியூ அப்டேட்' செய்வதற்காக, சென்னையில் பல்வேறு இடங்களை, '360' டிகிரி கோணத்தில் காரில் கேமரா பொருத்தி 'வீடியோ' எடுத்தது, விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, தகவல்தொழில்நுட்பத் துறை பிரிவு போலீசார் வரவழைக்கப்பட்டு, அவர்களும் விசாரித்தனர்.
இதற்காக உரிய அனுமதி பெற்றிருந்ததும் தெரியவந்ததை அடுத்து, கேமரா வாகனங்களை விடுவித்தனர்.