/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஏ.டி.எம்.,மை உடைக்க முயற்சி: 16 வயது சிறுவன் கைது ஏ.டி.எம்.,மை உடைக்க முயற்சி: 16 வயது சிறுவன் கைது
ஏ.டி.எம்.,மை உடைக்க முயற்சி: 16 வயது சிறுவன் கைது
ஏ.டி.எம்.,மை உடைக்க முயற்சி: 16 வயது சிறுவன் கைது
ஏ.டி.எம்.,மை உடைக்க முயற்சி: 16 வயது சிறுவன் கைது
ADDED : ஜூன் 04, 2024 12:29 AM

செய்யூர் : செய்யூர் பஜார் பகுதியில், தனியார் ஏ.டி.எம்., உள்ளது. நேற்று முன்தினம் இரவு 2:00 மணிக்கு, ஏ.டி.எம்.,மை உடைத்து பணத்தை திருடிச்செல்ல, மர்ம நபர் ஒருவர் முயற்சி செய்துள்ளார்.
கம்பி வாயிலாக மேற்புற பூட்டை உடைத்து, உட்பகுதியில் உள்ள லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளார். லாக்கரை உடைக்க முடியாததால், பணத்தை கொள்ளை அடிக்காமல் அங்கிருந்து தப்பியுள்ளார்.
இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், ஏ.டி.எம்., உடைக்கப்பட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகள் வாயிலாக, தப்பிச் சென்ற மர்ம நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில், திருட்டில் தொடர்புடைய, பனையூர் கிராமத்தை சேர்ந்த, 16 வயது சிறுவனை கைது செய்துவிசாரித்து வருகின்றனர்.