/உள்ளூர் செய்திகள்/சென்னை/ விளையாட்டு திடல் சீரமைப்பு ஜவ்வு ஏமாற்றத்துடன் திரும்பும் சிறுவர்கள் விளையாட்டு திடல் சீரமைப்பு ஜவ்வு ஏமாற்றத்துடன் திரும்பும் சிறுவர்கள்
விளையாட்டு திடல் சீரமைப்பு ஜவ்வு ஏமாற்றத்துடன் திரும்பும் சிறுவர்கள்
விளையாட்டு திடல் சீரமைப்பு ஜவ்வு ஏமாற்றத்துடன் திரும்பும் சிறுவர்கள்
விளையாட்டு திடல் சீரமைப்பு ஜவ்வு ஏமாற்றத்துடன் திரும்பும் சிறுவர்கள்
ADDED : ஜூன் 28, 2024 12:12 AM

வில்லிவாக்கம், அரைகுறையாக விடப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டுத் திடலை விரைவாக சீரமைத்து, சிறுவர்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
சென்னை, அண்ணா நகர் மண்டலம், 95வது வார்டில் வில்லிவாக்கம், அகத்தியர் நகர் உள்ளது. இங்குள்ள எட்டாவது தெருவில், சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான, சிறுவர் விளையாட்டுத் திடல் உள்ளது.
இப்பகுதியில் வசிப்போர் காலையும், மாலையும் விளையாட்டுத் திடலில் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இந்த விளையாட்டுத் திடல் முழுதும் புதர் போல் காட்சியளித்தது.
நுழைவாயிலில் குப்பை கொட்டப்பட்டு, குப்பை மேடாக மாறியது. இதுகுறித்து, சில மாதங்களுக்கு முன், நம் நாளிதழில் சுட்டிக்காட்டப்பட்டது. அதன் பின், பூங்காவை சீரமைக்கும் பணிகள் துவங்கின.
தற்போது, பல மாதங்களாக பணிகள் நடப்பதால், சிறுவர்கள் விளையாட முடியாமலும், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமலும் தவிக்கின்றனர்..
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, அரைகுறையாக விடப்பட்ட சீரமைப்பு பணிகளை விரைவாக முடித்து, சிறுவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.