Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ புளூ ஸ்கை டி-20 கிரிக்கெட் யுனிகார்ன் அணி அபார வெற்றி

புளூ ஸ்கை டி-20 கிரிக்கெட் யுனிகார்ன் அணி அபார வெற்றி

புளூ ஸ்கை டி-20 கிரிக்கெட் யுனிகார்ன் அணி அபார வெற்றி

புளூ ஸ்கை டி-20 கிரிக்கெட் யுனிகார்ன் அணி அபார வெற்றி

ADDED : ஜூன் 06, 2024 12:18 AM


Google News
சென்னை, சென்னையில் இயங்கிவரும் புளூ ஸ்கை கிரிக்கெட் அகாடமி சார்பில், டி-20 கிரிக்கெட் போட்டிகள், நகரின் பல இடங்களில் நடந்து வருகின்றன.

இதில் பங்கேற்றுள்ள ஒன்பது அணிகளும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதிக வெற்றி பெறும் நான்கு அணிகள், அரையிறுதிக்கு முன்னேறும்.

அதன்படி, தாம்பரம் கிறிஸ்துவ கல்லுாரி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில், யுனிகார்ன் அணியுடன் ஹாரிங்டன் வாரியர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது.

முதலில் களமிறங்கிய ஹாரிங்டன் அணி, நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய யுனிகார்ன் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சையத் மற்றும் யாஷ் இருவரும், எதிரணியின் பந்துகளை துவம்சம் செய்ய, 7.5 ஓவரில், விக்கெட் இழப்பின்றி 126 ரன்கள் எடுத்தது.

இதனால், 10 விக்கெட் வித்தியாசத்தில் யுனிகார்ன் அணி அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் சையத் 34 பந்துகளில் 15 பவுண்டரி, 7 சிக்சர் உட்பட 106 ரன்கள் குவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us