/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 9வது மாடியில் இருந்து குதித்து ஆசிரியை தற்கொலை 9வது மாடியில் இருந்து குதித்து ஆசிரியை தற்கொலை
9வது மாடியில் இருந்து குதித்து ஆசிரியை தற்கொலை
9வது மாடியில் இருந்து குதித்து ஆசிரியை தற்கொலை
9வது மாடியில் இருந்து குதித்து ஆசிரியை தற்கொலை
ADDED : மார் 15, 2025 12:47 AM
சென்னை, மந்தைவெளி, திருவேங்கடம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் மாளவிகா, 28. இவர், அபிராமபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
நேற்று காலை, 9வது தளத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த அவர், திடீரென கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்து, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்த அவரை, அவரது பெற்றோர் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மயிலாப்பூர் போலீசார் விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், மாளவிகாவிற்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். அது அவருக்கு பிடிக்காததால், தற்கொலை செய்தது தெரியவந்தது.