/உள்ளூர் செய்திகள்/சென்னை/ போதை பொருள் வழக்கில் மேலும் ஒருவர் கைது போதை பொருள் வழக்கில் மேலும் ஒருவர் கைது
போதை பொருள் வழக்கில் மேலும் ஒருவர் கைது
போதை பொருள் வழக்கில் மேலும் ஒருவர் கைது
போதை பொருள் வழக்கில் மேலும் ஒருவர் கைது
ADDED : மார் 15, 2025 12:47 AM
மாதவரம், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு தனிப்படை போலீசார், மாதவரம் பேருந்து நிலையம் அருகே, கடந்த 11ம் தேதி நடத்திய சோதனையில், அஜய், ராகுல் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து, மெத் ஆம்பெட்டமைன், கஞ்சா மற்றும் 8 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் தலைமறைவாக இருந்தார். கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்த ஷாகுல், 25, என்ற அந்த நபரை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இவர், வடபழனியில் உள்ள பழரச கடையில் வேலை செய்து வந்தது தெரியவந்தது. இவரிடமிருந்து, ஒரு மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.