இரவில் 6 மணி நேரம் மின்தடையால் அவதி
இரவில் 6 மணி நேரம் மின்தடையால் அவதி
இரவில் 6 மணி நேரம் மின்தடையால் அவதி
ADDED : ஜூன் 16, 2024 12:33 AM
திருவொற்றியூர், திருவொற்றியூர் ஏழாவது வார்டு, அண்ணா நகர், பாலகிருஷ்ணா நகர், அண்ணாமலை நகர் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணிக்கு திடீரென மின் தடை ஏற்பட்டது.
காலை 6:00 மணி வரை மின் வினியோகம் சீராகவில்லை. இதன் காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் துாக்கம் தொலைத்து, வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தும் பலனில்லை. அறிவிக்கப்படாத மின்தடை பல மணி நேரமாக மாறி வருவது மக்களிடையே, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, மின் சேவை சீராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.