/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தெருநாய்கள் இரவில் தொல்லை துாக்கமின்றி தவிக்கும் மக்கள் தெருநாய்கள் இரவில் தொல்லை துாக்கமின்றி தவிக்கும் மக்கள்
தெருநாய்கள் இரவில் தொல்லை துாக்கமின்றி தவிக்கும் மக்கள்
தெருநாய்கள் இரவில் தொல்லை துாக்கமின்றி தவிக்கும் மக்கள்
தெருநாய்கள் இரவில் தொல்லை துாக்கமின்றி தவிக்கும் மக்கள்
ADDED : ஜூன் 22, 2024 05:47 PM
மடிப்பாக்கம், பாலையா கார்டனில், நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், வாஞ்சிநாதன் தெரு, பிருந்தாவனம் தெரு, திலகர் அவென்யூ வடக்கு, தெற்கு ஆகியவை இணையும் சந்திப்பு உள்ளது.
இதில், பிருந்தாவன் தெருவில் ஒருவர், தன் வீட்டில் 10 தெரு நாய்களுக்கு உணவளித்து கவனித்து வருகிறார்.
இந்த நாய்கள், தினமும் இரவு 11:30 மணிக்கு, சந்திப்பு பகுதியில் ஊளையிட்டபடி திரிகின்றன. மற்ற தெரு நாய்களும் அங்கு கூடுவதால், ஒன்றோடு ஒன்று பயங்கரமாக குரைத்து சண்டையிட்டு கொள்கின்றன.
ஒவ்வொரு நாளும் அவற்றின் அட்டகாசம் அதிகரித்து வருவதால், பகுதிவாசிகளின் துாக்கம் தொலைகிறது.
மேலும், சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்வோரை இந்த நாய்கள் தொடர்ந்து துரத்துவதால், பல கீழே விழுந்து விபத்துக்களை சந்தித்து வருகின்றனர். இது தொடர்பாக மாநகராட்சிக்கு பல முறை புகார் அளித்தும், இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.
சமீப காலமாக, நாய்களின் ஆக்ரோஷத்தால் பல சிறார்கள் கடிப்பட்டு, காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி வருகின்றன. இங்கு திரியும் ஏராளமான நாய்களால், சிறுவர்கள் கடிபடும் அபாயம் உள்ளது.
அதற்கு முன், அனுமதியின்றி வீட்டில் வளர்க்கும் தெரு நாய்கள் மற்றும் தெருவில் திரியும் மற்ற நாய்களை பிடித்து, மாநகராட்சி உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- நமது நிருபர் -