/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாநில டேபிள் டென்னிஸ் சிறுவர் - சிறுமியர் அசத்தல் மாநில டேபிள் டென்னிஸ் சிறுவர் - சிறுமியர் அசத்தல்
மாநில டேபிள் டென்னிஸ் சிறுவர் - சிறுமியர் அசத்தல்
மாநில டேபிள் டென்னிஸ் சிறுவர் - சிறுமியர் அசத்தல்
மாநில டேபிள் டென்னிஸ் சிறுவர் - சிறுமியர் அசத்தல்
ADDED : ஜூலை 10, 2024 12:29 AM

சென்னை, தமிழக டேபிள் டென்னிஸ் சங்கம் மற்றும் சவீதா இன்ஸ்டிடியூட் சார்பில், மாநில தரவரிசை டேபிள் டென்னிஸ் போட்டிகள் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தன.
இதில், ஆண்கள் பிரிவில் பிரயேஷை, மூன்று போட்டிகளில் வென்று அபிநந்த் புதிய சாதனை படைத்தார். அதேபோல், பெண்கள் பிரிவில் செலினா தீப்தி, நித்யஸ்ரீயை 4 - 2 என்ற புள்ளிக்கணக்கில் வென்று, சீசனின் இரண்டாவது பட்டத்தை பெற்றார்.
அதேபோல, 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் அனன்யா வெற்றி பெற்று, இரட்டை சாதனை படைத்தார்.
பெண்களுக்கான 19 வயதுக்கு உட்பட்டோரில், ஷர்வானியை ஷ்ரியாவும், 17 வயதுக்கு உட்பட்டோரில் நந்தினியை அனன்யாவும், 13 வயதுக்கு உட்பட்டோரில் ஹர்ஜானியை சிந்தன்யா நந்தகோபாலும், 11 வயதுக்குட்பட்டோரில் சஹானாவை பிரதிகாவும் வென்றனர்.
மேலும், ஆண்களுக்கான 15 வயதுக்கு உட்பட்டோரில் ஆகாஷ் ராஜவேலு, விஷ்ருத் ராமகிருஷ்ணனையும், 13 வயதுக்கு உட்பட்டோரில் சஞ்சய் அரவிந்த் சிவகனீஷையும் வென்றனர்.
கார்ப்பரேட் பிரிவில், விக்னேஸ்வரன், சசிகுமாரையும், மூத்தோர் பிரிவில் ராஜேஷ், செந்திலையும் வென்றனர்.
மாநில தரவரிசை டேபிள் டென்னிஸ் போட்டியின் வெற்றியாளர்கள்.