/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தி.நகரில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் மூடல் தி.நகரில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் மூடல்
தி.நகரில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் மூடல்
தி.நகரில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் மூடல்
தி.நகரில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் மூடல்
ADDED : ஜூலை 10, 2024 12:28 AM

தி.நகர், தி.நகரில் அடுக்குமாடி வாகன நிறுத்ததிற்கான ஒப்பந்த காலம் முடிவடைந்ததால், தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தி.நகர், தணிகாசலம் சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டது. இதில், 260 கார்கள், 350 இருசக்கர வாகனங்கள் நிறுத்தலாம்.
இந்த வாகன நிறுத்ததிற்கான ஒப்பந்த காலம், ஜூன் மாதத்துடன் முடிவடைந்தது. மறு ஒப்பந்தம் கோருவதில் மாநகராட்சியினர் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
இதனால் வேறு வழியின்றி நடைபாதையையும், சாலையையும் ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் பாதசாரிகளுக்கு இடையூறும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
ஒப்பந்த காலம் முடிவடைய உள்ள நிலையிலேயே மறு ஒப்பந்தம் விட்டு தயார் நிலையில் இருந்திருக்க வேண்டும்.
வாகன நிறுத்துமிடம் மூடப்பட்டுள்ளதால் வேறுவழியின்றி தி.நகருக்கு பொருட்கள் வாங்க வருவோர் நடைபாதையிலும் சாலையை ஆக்கிரமித்து நிறுத்த வேண்டி உள்ளது. அவ்வாறு நிறுத்தினால் போலீசார் 500 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து மாநகராட்சி பொறியாளரிடம் கேட்டபோது, இன்னும், 10 நாட்களில் மறு ஒப்பந்தம் விடப்பட்டு வாகன நிறுத்தம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என்றார்.