/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பாலியல் புகார்: பேராசிரியருக்கு ஜாமின் பாலியல் புகார்: பேராசிரியருக்கு ஜாமின்
பாலியல் புகார்: பேராசிரியருக்கு ஜாமின்
பாலியல் புகார்: பேராசிரியருக்கு ஜாமின்
பாலியல் புகார்: பேராசிரியருக்கு ஜாமின்
ADDED : ஜூன் 04, 2024 12:21 AM
சென்னை,சென்னையில் உள்ள கலாஷேத்ரா நடனப் பள்ளியில் பேராசிரியராக பணியாற்றியவர் ஸ்ரீஜித் கிருஷ்ணா. இதே பள்ளியில், 23 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவி ஒருவர், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு எதிராக புகார் அளித்தார்.
இதையடுத்து, கடந்த மாதம் 22ல் கைது செய்யப்பட்ட ஸ்ரீஜித் கிருஷ்ணா ஜாமின் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
மனு, நீதிபதி தமிழ்செல்வி முன், விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களுக்கு பின், ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமின் வழங்கி, நீதிபதி உத்தரவிட்டார். வெளிநாடு செல்ல வேண்டும் என்றால், விசாரணை நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெறும்படி, நீதிபதி நிபந்தனை விதித்தார்.