/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கொலை வழக்கு குற்றவாளி கத்தியுடன் சைதை, தி.நகர் ரயில் நிலையத்தில் ரகளை இருவருக்கு கத்திக்குத்து கொலை வழக்கு குற்றவாளி கத்தியுடன் சைதை, தி.நகர் ரயில் நிலையத்தில் ரகளை இருவருக்கு கத்திக்குத்து
கொலை வழக்கு குற்றவாளி கத்தியுடன் சைதை, தி.நகர் ரயில் நிலையத்தில் ரகளை இருவருக்கு கத்திக்குத்து
கொலை வழக்கு குற்றவாளி கத்தியுடன் சைதை, தி.நகர் ரயில் நிலையத்தில் ரகளை இருவருக்கு கத்திக்குத்து
கொலை வழக்கு குற்றவாளி கத்தியுடன் சைதை, தி.நகர் ரயில் நிலையத்தில் ரகளை இருவருக்கு கத்திக்குத்து
ADDED : ஜூன் 04, 2024 12:22 AM
அசோக் நகர், சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் பழ வியாபாரியை கொலை செய்த வழக்கில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தவர், சைதாப்பேட்டை மற்றும் தி.நகர் ரயில் நிலையத்தில் தன்னிடம் தகராறு செய்த இருவரை துரத்தி, துரத்தி கத்தியால் குத்திய சம்பவரம், பயணியரை அதிர்ச்சியடைய வைத்தது.
சென்னை ஆதம்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்தவர், ராஜேஸ்வரி, 30. இவர் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பழ வியாபாரம் செய்தார். கடந்த ஆண்டு ஜூலை 19ம் தேதி, முன் விரோதம் காரணமாக நான்கு பேர் கும்பலால், சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ராஜேஸ்வரி வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில், ராஜேஸ்வரியின் தங்கை நாகவல்லி, 24, சக்திவேல், ஜெகதீஷ், ஜான் சூர்யா ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களில் அண்ணா சாலை கண்ணகி தெருவை சேர்ந்த சக்திவேல், 27 என்பவர் ஜாமினில், சிறையில் இருந்து வெளிவந்துள்ளார். இவரும், இவரது தம்பி தினேஷ், 26, என்பவரும் நேற்று சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றிருந்தனர். அப்போது, கொலை செய்யப்பட்ட ராஜேஸ்வரியின் ஆதரவாளர் பார்த்திபன், 27, என்பவர், சக்திவேலிடம் தகராறு செய்தார்.
ஆத்திரமடைந்த சக்திவேல், மறைத்து வைத்திருந்த கத்தியால், பார்த்திபனை துரத்திச் சென்று தலையில் வெட்டினார்.
காயமடைந்த பார்த்திபன் அங்கிருந்து தப்பியோடி, தன்னுடன் அரவிந்த், 22, மற்றும் அருண், 23, ஆகியோரை அழைத்துக் கொண்டு மாம்பலம் ரயில் நிலையம் சென்றார்.
மாம்பலம் ரயில் நிலையம் சைக்கிள் ஸ்டாண்டில், பழ வியாபாரம் செய்து கொண்டிருந்த சக்திவேலின் வளர்ப்பு தாய் கஸ்துாரியிடம், சக்திவேல் குறித்து விசாரித்தனர். அப்போது, அங்கு சக்திவேல் மற்றும் தினேஷ் வந்தனர்.
மூவரையும் சக்திவேல் கத்தியுடன் துரத்தினார். இதில் அரவிந்தின் இடது காதில் வெட்டு விழுந்தது.
தகராறில் காயமடைந்த பார்த்திபன் மற்றும் அரவிந்த் ஆகியோர் கே.கே.நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின், மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சக்திவேல் மற்றும் தினேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.