/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மழைநீருடன் கழிவுநீர் கலப்பு ஜி.என்.டி., சாலையில் அவதி மழைநீருடன் கழிவுநீர் கலப்பு ஜி.என்.டி., சாலையில் அவதி
மழைநீருடன் கழிவுநீர் கலப்பு ஜி.என்.டி., சாலையில் அவதி
மழைநீருடன் கழிவுநீர் கலப்பு ஜி.என்.டி., சாலையில் அவதி
மழைநீருடன் கழிவுநீர் கலப்பு ஜி.என்.டி., சாலையில் அவதி
ADDED : ஜூன் 12, 2024 12:31 AM

செங்குன்றம், சென்னை செங்குன்றம் ஜி.என்.டி., சாலையில், 17 கோடி ரூபாய் செலவில், புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, ஓராண்டுக்கும் மேலாக நடக்கிறது.
ஆனால், பணி முடிந்த சில இடங்களில், மழைநீர் வடிய வழியின்றி, நடைபாதையில் தேங்கி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள நாரவாரிக்குப்பம் பேரூராட்சி அலுவலகம், சோத்துப்பாக்கம் சாலை சந்திப்பு என, பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்குகிறது.
அதில், பாதுகாப்பற்ற நிலையில் மின்வடமும் உள்ளது. அதனால், அந்த இடங்களை கடந்து செல்வோர் அவதிப்படுகின்றனர். மேலும், மின் வடங்களால், மின்கசிவு ஏற்படும் என்ற அச்சத்திற்கும் ஆளாகி உள்ளனர்.
மேலும், மழைநீர் தேங்குவதால், வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களை சாலையில் நிறுத்துகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தும் ஏற்பட்டு வருகிறது.
எனவே, நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.