/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆன்லைனில் தனியார் ஊழியரிடம் ரூ.93,000 நுாதனமாக 'ஆட்டை' ஆன்லைனில் தனியார் ஊழியரிடம் ரூ.93,000 நுாதனமாக 'ஆட்டை'
ஆன்லைனில் தனியார் ஊழியரிடம் ரூ.93,000 நுாதனமாக 'ஆட்டை'
ஆன்லைனில் தனியார் ஊழியரிடம் ரூ.93,000 நுாதனமாக 'ஆட்டை'
ஆன்லைனில் தனியார் ஊழியரிடம் ரூ.93,000 நுாதனமாக 'ஆட்டை'
ADDED : ஜூன் 04, 2024 12:37 AM
வியாசர்பாடி, தனியார் நிறுவன ஊழியரிடம், 'ஆன்லைன்' வழியாக, 93,000 ரூபாய் மோசடி செய்தவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.
வியாசர்பாடி, பாலமுருகன் தெருவைச் சேர்ந்தவர் ஜனார்த்தன யாதவ், 44; தனியார் நிறுவன ஊழியர்.
இவர், மே 27ம் தேதி, 'ஆன்லைன் டாஸ்க் பிசினஸ்' என்ற விளம்பரத்தை பார்த்து, மொபைல் போன் ஒன்றிற்கு வாட்ஸாப் வழியாக தொடர்பு கொண்டுள்ளார்.
அப்போது, வாட்ஸாப் வழியாக 'டாஸ்க்' வந்த நிலையில், அதை முடித்தவுடன், 120 ரூபாய் வரவு வந்துள்ளது. இதேபோல் பலமுறை டாஸ்க் முடித்த நிலையில், பணம் வந்துள்ளது.
இதற்கிடையில், 3,000, 10,000, 30,000 ரூபாய் செலுத்திய நிலையில், பணம் திரும்ப வரவில்லை. அதை தொடர்ந்து, அவர்கள் கொடுத்திருந்த வலைதளம் ஒன்றில் விசாரித்த போது, 50,000 ரூபாய் அனுப்பும்படி கூறியுள்ளனர்.
அதையும் அனுப்பிய நிலையில், 93,000 ரூபாயும் திரும்ப வரவில்லை.
இது குறித்து ஜனார்த்தன யாதவ், வியாசர்பாடி காவல் நிலையத்தில், நேற்று காலை புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.