/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இறைச்சி கடைகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை இறைச்சி கடைகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை
இறைச்சி கடைகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை
இறைச்சி கடைகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை
இறைச்சி கடைகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை
ADDED : ஜூன் 04, 2024 12:36 AM

ஓட்டேரி,திரு.வி.க.நகர் மண்டலத்திற்கு உட்பட்ட 73வது வார்டு, ஓட்டேரி ஸ்ட்ராஹன்ஸ் சாலை மற்றும் தாசாமகான் சந்திப்புகளில் உள்ள பிரியாணி, கறி விற்பனை கடைகளின் கழிவுகளால், மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்படுவதாக, பகுதி மக்கள் புகார் அளித்திருந்தனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட கடைகளுக்கு நோட்டீஸ் அளித்து நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் நேற்று திட்டமிட்டிருந்தனர்.
முன்னதாக, சம்பந்தப்பட்ட கடைகள் முறையாக கழிவுநீர் இணைப்பு பெற்று, கழிவுகளை சரியாக வெளியேற்ற அறிவுறுத்தப்பட்டிருந்தது.
பல கடைகள், கழிவுநீர் இணைப்பே இல்லாமல், மழைநீர் கால்வாயில் முறைகேடாக கழிவுகளை வெளியேற்றி வந்தனர்.
இந்நிலையில் ஸ்ட்ராஹன்ஸ் சாலை, அலெக்சாண்டர் தெரு சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில், அதிகாரிகள் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அடைப்பு ஏற்பட்ட பகுதிகளில், வாரிய ஊழியர்கள், லாரிகள் வாயிலாக கழிவுகளை அகற்றினர்.
முறையான கழிவுநீர் இணைப்பு பெற கடைகளுக்கு அறிவுறுத்திய அதிகாரிகள், மீறினால் கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படும் என எச்சரித்து உள்ளனர்.