/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பஸ்சில் மூதாட்டியிடம் ரூ.1 லட்சம் 'பிக்பாக்கெட்' பஸ்சில் மூதாட்டியிடம் ரூ.1 லட்சம் 'பிக்பாக்கெட்'
பஸ்சில் மூதாட்டியிடம் ரூ.1 லட்சம் 'பிக்பாக்கெட்'
பஸ்சில் மூதாட்டியிடம் ரூ.1 லட்சம் 'பிக்பாக்கெட்'
பஸ்சில் மூதாட்டியிடம் ரூ.1 லட்சம் 'பிக்பாக்கெட்'
ADDED : ஜூலை 24, 2024 12:55 AM
ராயபுரம், சென்னை, சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் சிவானந்தம், 67. இவரது மனைவி நிர்மலா, 64. இவர், நேற்று தன் தங்க நகைகளை அடகு வைத்து, 1 லட்ச ரூபாய் பெற்று, ராயபுரத்தில் உள்ள மகள் சரண்யாவின் வீட்டில் கொடுப்பதற்காக சென்றார்.
இதற்காக பிராட்வேயில் இருந்து எண்ணுார் நோக்கி செல்லும் தடம் எண்: 4ல் ஏறினார்.
பின் கல்மண்டபம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கும்போது, அவரது பையில் இருந்த பணம் மாயமானது தெரியவந்தது. அவர் கொடுத்த புகாரின்படி, ராயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல, நேற்று முன்தினம், தடம் எண்: 56ஏ பேருந்தில் திருவொற்றியூரில் இருந்து பயணித்த அமலு, 37, என்பவரிடம், மர்ம நபர்கள் 1 லட்சம் ரூபாய் பிக்பாக்கெட் அடித்து சென்றது குறிப்பிடத்தக்கது. பிக்பாக்கெட் நபர்களை கண்டறிந்து, போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.