/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 21,000 வாரிய வீடுகள் சீரமைக்க ரூ.131 கோடி 21,000 வாரிய வீடுகள் சீரமைக்க ரூ.131 கோடி
21,000 வாரிய வீடுகள் சீரமைக்க ரூ.131 கோடி
21,000 வாரிய வீடுகள் சீரமைக்க ரூ.131 கோடி
21,000 வாரிய வீடுகள் சீரமைக்க ரூ.131 கோடி
ADDED : ஜூலை 24, 2024 12:55 AM
செம்மஞ்சேரி, கண்ணகி நகர், எழில் நகர், சுனாமி நகர் பகுதியில், நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 23,704 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன.
இந்த வீடுகள், 10 முதல் 20 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இதில், கண்ணகி நகரில் உள்ள, 15,656 வீடுகள் மிகவும் பழுதடைந்திருந்தன. கடந்த ஆண்டு, 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் சீரமைக்கப்பட்டன. இந்நிலையில், 10,460 வீடுகளை சீரமைக்க, 41 கோடி ரூபாயில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், செம்மஞ்சேரியில் 6,764 வீடுகள் உள்ளன. இதில், 1,120 வீடுகள், அயோத்திதாசர் பண்டிதர் திட்டத்தில், 3.20 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள வீடுகளில், 3,000 வீடுகளை சீரமைக்க, 30 கோடி ரூபாய் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.
பெரும்பாக்கத்தில் 23,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில், 10 ஆண்டுகள் பழமை வாய்ந்த, 87 பிளாக்குகளில் உள்ள, 8,000 வீடுகளை சீரமைக்க, 60 கோடி ரூபாய் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. மூன்று இடங்களில் உள்ள, 21,460 வீடுகளை சீரமைக்க, 131 கோடி ரூபாய் நிதி ஒதுக்க மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிதியில், மழைநீர் ஒழுகாமல் இருக்க, கூரையில் கூலிங் டைல்ஸ், கழிப்பறை சீரமைப்பு, புதிய குடிநீர் தொட்டிகள் அமைத்தல், சேதமடைந்த குழாய் சீரமைப்பு, வண்ணம் பூச்சு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த பணியை பருவமழைக்கு முன் செய்ய வேண்டும். அதற்கு ஏற்ப, நிதி ஒதுக்கி ஒப்பந்தம்விட வாரியம் முடிவு செய்து உள்ளது.