/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாநகராட்சி அலட்சியத்தால் புதைகுழியாக மாறிய சாலைகள் மாநகராட்சி அலட்சியத்தால் புதைகுழியாக மாறிய சாலைகள்
மாநகராட்சி அலட்சியத்தால் புதைகுழியாக மாறிய சாலைகள்
மாநகராட்சி அலட்சியத்தால் புதைகுழியாக மாறிய சாலைகள்
மாநகராட்சி அலட்சியத்தால் புதைகுழியாக மாறிய சாலைகள்
ADDED : ஜூன் 13, 2024 12:26 AM

பம்மல், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மல், அனகாபுத்துார் பகுதிகளில், 211 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை, தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்கிறது.
இப்பணி நடைபெறும் சாலைகளில், பள்ளம் தோண்டி குழாய் பதிக்கப்பட்ட பின், அந்த பள்ளத்தை முறையாக மூடுவதில்லை. உடனடியாக சாலையும் அமைப்பதில்லை.
அரைகுறையாக மூடுவதால், பள்ளமாக மாறுவதோடு, லேசான மழை பெய்தால் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது.
அதுபோன்ற நேரங்களில், இச்சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு படுமோசமான நிலையில் மாறிவிடுகிறது.
சில நாட்களாக பெய்த மழையில், அனகாபுத்துார், குருசாமி நகர் சாலை, பாலாஜி நகர், 4, 5, 7 உள்ளிட்ட தெருக்களில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு சேறும், சகதியுமாக மாறிவிட்டது.
பலமுறை புகார் தெரிவித்தும், அதிகாரிகள் பணி முடிந்த சாலைகளை உடனுக்குடன் சீரமைத்து, புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதில்லை.
இன்னும் சில மாதங்களில், மழைக்காலம் துவங்கிவிடும். அப்போது, மேலும் பிரச்னை அதிகமாகி விடும். அதற்கு முன் தீர்வு தேவை.