/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அதிகாரிகள் 'ஆசி'யுடன் சாலை ஆக்கிரமிப்பு அதிகாரிகள் 'ஆசி'யுடன் சாலை ஆக்கிரமிப்பு
அதிகாரிகள் 'ஆசி'யுடன் சாலை ஆக்கிரமிப்பு
அதிகாரிகள் 'ஆசி'யுடன் சாலை ஆக்கிரமிப்பு
அதிகாரிகள் 'ஆசி'யுடன் சாலை ஆக்கிரமிப்பு
ADDED : ஜூலை 18, 2024 12:10 AM

செங்குன்றம்,
செங்குன்றம் ஜி.என்.டி., சாலையின் இருபுறமும் 1.2 கி.மீ., துாரத்திற்கு, 17 கோடி ரூபாய் செலவில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.
இதை ஒட்டி, 2 முதல் 10 அடி வரை நடைபாதையும் அமைக்கப்படுகிறது. தற்போது அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனம் மற்றும் கடைக்காரர்கள் சிமென்ட் தளம் அமைத்து, சாலையை ஆக்கிரமித்து வருகின்றனர்.
செங்குன்றம் காவல் நிலையம் எதிரில் உள்ள தனியார் வணிக வளாகம் மற்றும் பிரபல தேநீர் மற்றும் துணி விற்பனை கடையினர், மேற்கண்ட வகையில் ஜி.என்.டி., சாலையை ஆக்கிரமித்துள்ளனர்.
இதைத் தடுக்க வேண்டிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும், ஆக்கிரமிப்பிற்கு ஆசி வழங்கி, கண்டும் காணாமலும் இருந்து வருகின்றனர்.
கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. செங்குன்றம் பேருந்து நிலையம் அருகிலும், புதிய ஆக்கிரமிப்புகள் உருவாகுவது பெரும் தலைவலியாக மாறி வருகிறது.
இதனால், மழைநீர் வடிகாலுக்கு வெளியே நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற, நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.